சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதன்பிறகு, கல்வியாளர்களுடன் கலந்து பேசி பொதுத்தேர்வை எப்போது நடத்துவது குறித்த அட்டவணையை முதலமைச்சர் வெளியிடுவார்.
சத்தியமங்கலம் பகுதியில் கண்டிஷன் பட்டாக்களை உரிமைப் பட்டாவாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மலைப்பகுதியில் பட்டா வழங்க தடை நீடிக்கப்பட்ட நிலையில், விரைவில் மலைப்பகுதிகளிலும் இலவச பட்டா வழங்கப்படும். அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள விளாம்கோம்பை பகுதியில் மொபைல் மருத்துவ வசதி செய்து தரப்படும் ” என்றார்.
இதையும் படிங்க: தனி ஆளாய் நிலத்தை மீட்கப் போராடும் மூதாட்டி: 18 ஆண்டுகாலப் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?