ETV Bharat / city

வீடுகளில் முடங்கிய முழு கிராமம்! என்னதான் பிரச்னை? - Increase in water level in Bhavani Sagar Dam

ஈரோடு: மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெங்குமரஹாடா கிராம மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மேலும், பவானிசாகர் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் முடங்கிய முழு கிராமம்
வீடுகளில் முடங்கிய முழு கிராமம்
author img

By

Published : Aug 4, 2020, 6:53 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகேயுள்ள தெங்குமரஹாடா கிராமத்தின் நடுவே மாயாறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆறானது பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடாவுக்கு இடையே செல்வதால் கிராம மக்கள் பரிசல் மூலமாகவே ஆற்றை தாண்டிச் செல்வார்கள்.

ஆகையால், இக்கிராமத்திற்குச் செல்ல பரிசல் பயணம் தான் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. தற்போது ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கால் பரிசலை இயக்க முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வேறு போக்குவரத்து வசதி இல்லாததால் தெங்குமரஹாடா கிராம மக்களின் விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிப்படைந்துள்ளன.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி வரை உயர்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கால்நடைகளை மாயாற்று கரையோரம் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க; அஸ்ஸாம் வெள்ளம்: வீடுகளை இழக்கும் பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.