ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கபட்டு வருகின்றன.
இதனால், இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவை பள்ளிகளில் கொடியேற்றி, தேசப்பற்று பாடல்கள் பாடி கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 75ஆவது சுதந்திரதின விழாவையொட்டி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் தேச தலைவர்களின் பாடல்கள், வசனங்கள் குறித்து பேசி ஆன்லைன் மூலம் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வசனங்கள் பேசி அசத்திய மாணவி
அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் புதுபாளையத்தைச் சேர்ந்த முரளி என்பரது 2 வயது பயிலும் மகள் தேஜஸ்வி தேச தலைவர்களின் பாடல்கள், வசனங்களை பேசி அசத்தியுள்ளார். இதில் தனக்கே உரித்தான பாணியில் தேசப்பற்று பாடல்களுக்கு ஏற்றவாறு கைகளை அசைத்து முகப் பாவனைகள் செய்தும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட அந்த வீடியோவில், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், கரோனா தொற்றை வெள்ளையர்களை வெளியேற்றியது போல வெளியேற்ற அனைவரும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டியும், மாணவர்கள் அனைவரும் லட்சியத்தை நோக்கி கனவு காண சொன்ன அப்துல்காலமின் வார்த்தைகள் குறித்து உள்ளிட்ட பல வசனங்களை பேசியுள்ளார்.
இவர் வெளியிட்ட இந்த வீடியோவைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தேஜஸ்விக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்- மதுரை மக்களுடன் ஓர் சந்திப்பு!