ETV Bharat / city

எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல்: நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு: 'கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் இக்பால் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கருங்கல்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Mar 11, 2020, 9:25 AM IST

எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் தாக்குதல்  ஈரோடு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்  sdpi party protest  sdpi party district secretory attacked  எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

கோவை காட்டூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் இக்பால் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தடுக்கச் சென்ற ஷாஜகான் என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்திய சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'இக்பாலைத் தாக்கிய சங்பரிவார் அமைப்பினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்' என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'ஆளுநருக்கு அதிமுக அரசு பயப்படுகிறது' - நெல்லை முபாரக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.