ETV Bharat / city

தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம் - kothamangalam farmers worried

கொத்தமங்கலம் விவசாய தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொத்தமங்கலம் விவசாய தோட்டப் பகுதியில் காட்டு யானைகள்  கொத்தமங்கலம் விவசாயிகள் அச்சம்  காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க கொத்தமங்கலம் விவசாயிகள் கோரிக்கை  Wild elephants roaming kothamangalam farming area  kothamangalam farmers worried  kothamangalam prople request wild elephants take out
தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்
author img

By

Published : Dec 24, 2021, 2:04 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் கொத்தமங்கலம், காராச்சிக்கொரை, புதுப்பீர்கடவு கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கொத்தமங்கலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள விவசாய தோட்டப் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தது.

விவசாய தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்

காலை நேரத்தில் விவசாய விளைநிலத்தில் காட்டு யானைகள் நடமாடுவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் தொழிலாளர்கள் யானைகள் நடமாடுவதைக் கண்டு மிகுந்த அச்சமடைந்த சூழ்நிலையில் விவசாய விளை நிலங்களில் புகும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.