ETV Bharat / city

பழுதான கிடக்கும் சாலை: சீரமைத்து தர கிராமத்தினர் போராட்டம்!

author img

By

Published : Dec 21, 2020, 6:54 AM IST

கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாலையில் கற்களைப் போட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர். உடனடியாகச் சாலையைச் சீரமைத்து தர கோரிக்கைவைத்து இந்தப் போராட்டத்தினை கிராம மக்கள் நடத்தியுள்ளனர்.

road picketing protest in erode
road picketing protest in erode

ஈரோடு: சாலையைச் சீரமைத்து தரக்கோரி, சாலையின் நடுவே கற்களை இட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

கெம்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பளிஞ்சூர் காலனியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. பளிஞ்சூர் காலனிக்குச் செல்லும் சாலையின் குறுக்கே, ஒருவருக்காக சொந்த இடம் இருப்பதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.

இதனால் கிராமத்துக்குச் செல்ல 2 கிமீ சுற்றிச் செல்ல வேண்டும். இச்சூழலில் பளிஞ்சூர் காலனிக்குச் செல்லும் சாலை வழித்தடப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி பளிஞ்சூர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் குறுக்கே கற்களைப் போட்டும், ஆங்காங்கே குச்சிகளை வெட்டிப்போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த ஆய்வாளர் மோகன்ராஜ், இது தொடர்பாக ஊர் மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் செல்வதற்கு ஏற்றவாறு வழித்தடம் ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.