சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் புறம்போக்கு நிலங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகளவில் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் சத்தியமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்த சனாவுல்லா என்பவர் வீட்டுமனை பட்டா வாங்க, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சனாவுல்லாவிடம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொடுத்து நிலவரி அலுவலர்களிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதன்படி அந்தப் பணத்தை தனி வட்டாட்சியர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சனாவுல்லாவிடம் கொடுக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்து ஈரோடு நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: மாணவன் உள்பட 4 ஆசிரியர்களுக்கு கரோனா: பெற்றோர்கள் அதிர்ச்சி