ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தெங்குமராஹாவுக்கு வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த கிரஷர் ஊழியர்கள் மாயாற்று வழியாக காரில் சென்றனர். அதனைத் தொடர்ந்து பிக்கப் வேனும் சென்றது. அப்போது வேகமாக வந்த காரும், பிக்கப் வேனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரையோரம் ஒதுக்கியது.
வாகனங்கள் மீட்பு
இதில் காரில் இருந்த 10 பேர், பிக்கப் வேனில் இருந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் மேலே ஏறி கரைக்கு பாதுகாப்பாக சென்றனர். இந்த காரையும், பிக்கப் வேனையும மீட்க வந்த மற்றொரு வேனும் வெள்ளத்தில் சிக்கியது. ஓட்டுநர் நீச்சல் அடித்தபடி கரை சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் கயிறு கட்டி வேன் மூலம் 3 வாகனங்களை மீட்டனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வேகமாக செல்லும் தண்ணீரில் வாகனங்கள் கடக்க வேண்டாம் என்றும், ஆபத்தான பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெங்குமரஹாடா நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீரில் மிதக்கும் சென்னை