மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை ஐஐடி படித்த மாணவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல்
அதேபோல் நாமக்கல் மாவட்டம் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு 400-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்!