ETV Bharat / city

'10ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது?' - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஈரோடு: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

'10ஆம் வகுப்பு ரிசல்ட்?' - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

author img

By

Published : Jul 22, 2020, 2:16 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏழு கிராம ஊராட்சிகளில் ரூ.273.84 லட்சம் செலவில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை விரைவில் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆண்டில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும்" என்று தெரிவித்தார்.

வெள்ளாங்கோயில் ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தொடர்ந்து பேசிய அவர், "12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இதற்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வழங்கப்படும்" என்றார்.

மேலும், "பெற்றோர்கள் எப்போது விருப்பம் தெரிவிக்கிறார்களோ அப்போதுதான் பள்ளிகள் திறப்பது குறித்தும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகம் வழங்குவது குறித்தும் முடிவெடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க; 'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.