ETV Bharat / city

ஈரோடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கிய மதுரை இளைஞருக்கு பைக் பரிசு!

ஈரோடு: பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கி மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்னும் மாடுபிடி வீரர் சிறந்த வீரருக்கான முதல் பரிசையும், சிறந்த காளையாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது காளையும் வென்றது.

பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டி
பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டி
author img

By

Published : Jan 18, 2020, 10:02 PM IST

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் பேரவை மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் இந்த போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் தகுதியுள்ள 322 காளைகளும், 222 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் வீரர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய காளைகளுக்கும் தங்கக் காசு, செல்போன்கள், கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8.15 மணிக்குத் தொடங்கி மதியம் 2.45 வரையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கிப் பரிசுகளை வென்றனர்.

போட்டியின் போது காளைகளை அடக்க முயன்ற 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மேலும் கடும் நெரிசல் காரணமாக 4 பார்வையாளர்கள் மயக்கமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கி மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை வென்றார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 11 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் இரண்டாவது பரிசையும், 8 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரி என்பவர் மூன்றாவது பரிசையும் பெற்றார்.

பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டி

அதேபோல் மாடுபிடி வீரர்கள் முயற்சித்தும் தொடக்கூட முடியாமல் துள்ளி ஓடிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர் தவமணி என்பவருக்குச் சிறந்த காளைக்கான முதல் பரிசும், மணப்பாறையைச் சேர்ந்த ராஜா என்பவரின் காளைக்கு இரண்டாவது பரிசும், உய்ப்புறம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் காளைக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:

விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா - பொன்முடி அழைப்பு

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன18

ஈரோடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கிய இளைஞருக்கு பைக் பரிசு!

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த கார்த்தி சிறந்த வீரருக்கான முதல் பரிசையும், சிறந்த காளையாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது காளையும் பரிசு பெற்றது.

ஜல்லிக்கட்டுப் பேரவை மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 328 காளைகள் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு 6 காளைகள் தகுதியில்லாததாக அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள 322 காளைகள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டு வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 222 மாடுபிடி வீரர்கள் கடும் மருத்துவ சோதனைக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மூன்று சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாட்டின் திமிலைப் பிடித்து காளை உதறியபோதும் அதனை விடாமல் பிடித்து நின்று வெற்றி பெற்றனர்.

அதேபோல் வாடிவாசலிருந்து வெளிவரும் போதே பல காளைகள் திமிறிக் கொண்டு வேகத்துடன் வெளியேறி பிடிக்க முடியாமல் போனதால் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசு, செல்போன்கள், கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு உள்ளிட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8.15 மணிக்குத் தொடங்கி மதியம் 2.45 வரையிலும் சுமார் 6 மணி 30 நிமிடங்களுக்கு போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் சக வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.

போட்டியின் போது காளைகளை அடக்க முயன்ற 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்து உடனடியாக சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கடும் நெரிசல் காரணமாக 4 பார்வையாளர்கள் மயக்கமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை வென்றார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 11 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் இரண்டாவது பரிசையும், 8 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரி என்வர் மூன்றாவது பரிசையும் பெற்றார்.

அதேபோல் மாடுபிடி வீரர்கள் முயற்சித்தும் தொடக்கூட முடியாமல் துள்ளி ஓடிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர் தவமணி என்பவருக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசும், மணப்பாறையைச் சேர்ந்த ராஜா என்பவரது காளைக்கு இரண்டாவது பரிசும், உய்ப்புறம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது காளைக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. சுமார் 6 மணி 30 நிமிடங்கள் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலரியில் அமர்ந்தபடி மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Body:மேலும் போட்டியில் கலந்து கொண்ட காளைகளையும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் கைத்தட்டல்களையும், கரகோசங்களையும் எழுப்பி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

Conclusion:அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பேட்டி - கார்த்தி. முதல் பரிசு வென்றவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.