ETV Bharat / city

மாநில எல்லையில் அச்சுறுத்திய சிறுத்தை - கூண்டில் சிக்கியது!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மாநில எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

author img

By

Published : May 13, 2020, 9:32 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மாநில எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில்  சிக்கியது.
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மாநில எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், இருமாநில எல்லையான தாளவாடி மற்றும் குண்டல்பேட் வனப்பகுதியில் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் சிறுத்தை புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது. தாளவாடி அடுத்த மல்லன்குழி, கெட்டவாடி, திகினாரை போன்ற கிராமங்கள் தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ளன.

தமிழ்நாட்டு எல்லையில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் புகுந்து பட்டப்பகலில் ஆடுகளை அடித்துக் கொன்றுவிட்டு, சிறுத்தையானது கர்நாடக மாநில எல்லைக்குள் சென்று பதுங்கியது. சிறுத்தையைப் பிடிக்க தமிழ்நாடு வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால், சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்குகாட்டி வந்தது. அதே மாநில எல்லையில், கர்நாடக எல்லைக்குள் புகுந்து குண்டல்பேட் சவுதஹள்ளி கிராமத்தில் ஏராளமான ஆட்டை அடித்துக் கொன்றது.

இருமாநில விவசாயிகளையும் அச்சுறுத்திய சிறுத்தை மீண்டும் சிவமல்லப்பா தோட்டத்தில் ஆட்டை வேட்டை ஆடியது. இதையடுத்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்ட வனத்துறையினர் உயிரிழந்த ஆட்டைக் கூண்டில் வைத்து காத்திருந்தனர். அதே போல தமிழ்நாட்டு எல்லையிலும் தமிழ்நாடு வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தனர்.

இந்நிலையில் கர்நாடக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையைப் பரிசோதித்த மருத்துவர், அதன் உடல் நன்றாக இருந்ததால் 50 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டில் விடுவித்தனர். சிறுத்தை பிடிபட்டதால் தமிழ்நாடு - கர்நாடக எல்லையோர கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையும் படிங்க:

தொடரும் சிறுத்தைகளின் தாக்குதல்... அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.