ஈரோடு: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வேட்புமனு படிவத்துடன் இணைக்கப்படும் முக்கிய ஆவணமான நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரால் தரப்படும் பிரமாணப்பத்திரம் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
வேட்பாளர்கள் பிரமாணப்பத்திரத்தை டைப் செய்யும் கம்ப்யூட்டர் சென்டர்கள் மற்றும் வழக்கறிஞர் அலுவலகங்களில் குவிந்துள்ளனர்.
வழக்கறிஞரால் வழங்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து டைப் செய்யப்பட்டு, பிரிண்ட் அவுட் எடுத்து நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்குவதற்கு, 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராகுலுக்கு 'தமிழன்'ஆக அண்ணாமலையின் பதில் இதுதான்!