ஈரோட்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சிறுமியின் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் மாலதி, ஜான் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியிடம் கருமுட்டை பெற்ற ஈரோடு, சேலம், ஓசூர் மருத்துமனைகளில் சிறப்பு குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக சேலம், ஓசூர், திருச்சி மற்றும் ஆந்திரா, கேரளா ஆகிய மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் ஆஜராக காவல் துறையினர் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து நேரில் ஆஜராகிய மருத்துவர்களிடம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
கருமுட்டை விவகாரம் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரியுடன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் உள்ளது கண்டுபிடிப்பு - சிலை கடத்தல் பிரிவு