Farmers worship: சத்தியமங்கலம் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி அழகுப்படுத்தினர்.
ஆண்டுக்கொருமுறை திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவபொம்பைகளை காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாகச் செலுத்தி வழிபட்டனர்.
மேலும், கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தைக் கொண்டுவந்து கால்நடைகள் மீது தெளித்து வணங்கினர். ஆண்டுக்கொருமுறை மாட்டுப்பொங்கல் நாளில் மட்டுமே இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால் ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு!