ETV Bharat / city

ஈரோடு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு: குத்தகை விவசாயிகள் சாலைமறியல் - Pudukkaraippur Govt Paddy Procurement near Erode

அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் குத்தகை விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்ததால், கோவை அருகே புதுக்கரைபுதூரைச் சேர்ந்த விவசாயிகள் அரசுப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 15, 2022, 10:36 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுக்கரைப்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தில் குத்தகைதாரர்களின் நெல்லை கொள்முதல் செய்யாததைக் கண்டித்து அப்பபகுதி விவசாயிகள் அந்தியூர்-கோபிசெட்டிபாளையம் சாலையில் இன்று (செப்.15) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலைங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளில் தற்போது முதல்போக சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும். அவ்வாறு அந்நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல்லைத் தடுக்கும் விதமாக, நெல்கொள்முதல் நிலையங்களில் நில உரிமையாளர்களின் ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் நில உரிமையாளர்கள் பலரிடமிருந்து புதுக்கரைப்புதூர் பகுதியைச்சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும்போது, அவ்விவசாயிகள் கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரோடு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு: குத்தகை விவசாயிகள் சாலைமறியல்

இதனைக்கண்டித்து விவசாயிகள் அந்தியூர்-கோபிசெட்டிபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார் குத்தகை விவசாயிகளை சமாதானப்படுத்தியதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீபத்தில் குறைந்துவிட்டது! - வேதனை தெரிவித்த நீதிபதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.