ஈரோடு: பெருந்துறை முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளியின் சிறுநீர் கழிக்கும் கழிவறையைத் தொடர்ச்சியாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதனை அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.இந்த காட்சிகள் பரவியதை அடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும்,மாணவர்களை கழிவறையை தூய்மை செய்யும் படி நிர்ப்பந்தம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ காட்சியின் மூலமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த ஆசிரியர்கள் இருவர் மீது மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பெயரில் பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முள்ளம்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அம்மனுவில் சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை கழிவறையைச் சுத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்ததாக மைதிலி என்ற தலைமை ஆசிரியரையும் சுதா என்ற பள்ளியின் ஆசிரியையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:60% வரை பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு