ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியிடம் கருமுட்டை பெற்றது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட பெண், இளம்பெண்ணின் ஆதார் அடையாள அட்டையைப் போலியாக தயாரித்த நபர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்ததைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக கருமுட்டை பெற்ற மருத்துவமனை ஸ்கேன் சென்டர்களுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டது.
மேலும் 15 நாட்களில் மருத்துவமனைக்கும் சீல் வைக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து, நீதிமன்றம் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் புதிய நோயாளிகளை அனுமதிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் மருத்துவமனை இணை இயக்குநர் பிரம்ம குமாரி, வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஈரோடு சுதா மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்