ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானைகள் உணவுத் தேடி நெடுஞ்சாலைக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்துவருகின்றன. இந்தக் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாகத் தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வருவது வழக்கம்.
தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் விவசாய தோட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்நிலையில் அவ்வாறு கொண்டுசெல்லப்படும் கரும்புகள் சில சிதறி சாலைகளில் விழும்.
அப்படி விழும் கரும்புகளை தின்பதற்காக நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகளைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் - கிராம மக்களுக்கு எச்சரிக்கை