ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
இந்நிலையில் கடம்பூர் கிட்டாம்பாளையம் காப்புக்காட்டில் 30 வயதுள்ள பெண்யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினர் அங்குசென்று ஆய்வு செய்தனர்.
யானை இறப்பு
இறந்த பெண் யானை அருகே ஆண்யானை ஒன்றும், யானைகள் கூட்டமும் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கிச் சுட்டு யானைகளை விரட்டினர்.
அதனைத் தொடர்ந்து யானைகள் சென்றவுடன் இறந்த யானையின் உடலைக்கைப்பற்றி, உடற்கூராய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெண்யானையை ஆண்யானை தந்தத்தால் தாக்கிக் கொன்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: 'மரக்கட்டையை பற்றியபடி மிதந்த பெண்: 16 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்பு!'