சமீப காலமாக குடியிருப்புப் பகுதிகளிலும் சாலைகளிலும் விவசாய நிலங்களிலும் யானைகளின் அட்டகாசம் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் யானைகளிடமிருந்து தங்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் கோரிக்கைவைக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக தலமலை உள்ளது.ல இந்நிலையில், தற்போது இனப்பெருக்கக் காலம் என்பதால் சாலையில் யானைகள் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில் தலமலை தொட்டபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த யானை அவரைத் தாக்கியது.
அதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அப்பகுதியினர் கொண்டுசென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:
முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்