ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதையில் 16 டன்னுக்கு அதிகமாக உள்ள லாரிகளுக்குத் தடை விதித்தும், பொதுப் போக்குவரத்துக்கு இரவு 9 மணிக்கு மேல் அனுமதி இல்லை எனக்கூறியும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை தமிழ்நாடு அரசு தலையிட்டு, திம்பம் மலைப்பாதையில் இயல்பான நிலையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள், விவசாயிகள், அனைத்து வணிகர்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 330 அடி நீளமுள்ள பேனர் வைத்து கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் 'தரணி போற்றும் தலைவரே! எங்கள் முதல்வரே!! திம்பம் மலைப்பாதை விவகாரத்தில் தலையிட்டு உதவவேண்டும்' எனப் பேனர் வைத்துள்ளனர்.
இந்தப் பேனர் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. திம்பம் மலைப்பாதை தடையால் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் போராட்டத்தில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'சத்தியமங்கலம் தாளவாடியில் முழு கடையடைப்பு போராட்டம்!'