’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஈரோடு மாவட்டத்தில் இன்று தனது இரண்டாவது நாள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு மாலையணிவித்த அவர், பின்னர் முனிசிபல் காலனி, அரசு தலைமை மருத்துவமனை, ஸ்டோனி பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை அறிந்த அவர், பின்னர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நினைவகத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” முக.அழகிரி வரும் தேர்தலில் தனது செயல்பாடு இருக்கும் என்று கூறியுள்ளது அவரது உரிமை. அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
சமூகநீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடிய இயக்கம் திமுக. தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே செயல்பட்டு வரும் பாஜகவிற்கு சமூகநீதி மற்றும் சமத்துவம் குறித்து பேச எவ்வித அருகதையும் கிடையாது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாமக போராடுவது தேர்தல் நாடகம் என்று பலரும் கருதுகின்றனர். அதிமுக அரசு சுயமரியாதையை இழந்து நின்றாலும், யாராலும் திராவிடத்தையும், சுயமரியாதை உணர்வையும் அழித்து விடமுடியாது ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தேர்தலையொட்டி ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்'- கமல்ஹாசன்