ஈரோடு: அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள சங்கராப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (அக்.12) அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முதல் மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து, நான்காவது, ஐந்தாவது சுற்றில் திமுக வேட்பாளர் குருசாமி முன்னிலைப் பெற்றார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அதிமுக வேட்பாளர் நடராஜ் 774 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் குருசாமி ஆயிரத்து 71 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
குருசாமி வெற்றி பெற்றதை அடுத்து அந்தியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை குருசாமி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'ஒரே ஒரு ஓட்டு, பாஜகவுக்கு வேட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!