சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு விளையும் மக்காச்சோளம், மரவள்ளி, வெங்காயம், தக்காளி ஆகியவை சத்தியமங்கலம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் நாள்தோறும் கடம்பூர்-சத்தியமங்கலம் இடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. 15 கி.மீ. தூரம் குறுகலான செங்குத்தான வளைவான மலைப்பாதை என்பதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
மேலும், இருபுறமும் உள்ள இயற்கையை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. இதனால் மலைப்பகுதியில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. இதனால், குறுகிய வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் கடம்பூர் மலைப்பாதையில், ஆபத்தான 10 வளைவுகளில் குவிலென்ஸ் கண்ணாடிகளை போக்குவரத்து காவல்துறையினர் பொருத்தியுள்ளனர்.
குவிலென்ஸில் எதிரே வரும் வாகனங்கள் எளிதாக தெரிவதால் விபத்துகள் குறைந்துள்ளதாவும், சிறுத்தை, புலி, யானை நடமாட்டம் கூட தெளிவாத தெரிவதால், அவை வாகனத்தில் அடிபடும் நிகழ்வுகளும் இனி தவிர்க்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதம்