ஈரோடு: தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் பண்ணாரி அம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபடுவர்.
மேலும் கர்நாடக பக்தர்கள் அதிகளவில் வந்துசெல்லும் இக்கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகக் கோயில் நடை சாத்தப்பட்டது. ஒமைக்ரான் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் என அறிவித்ததை அடுத்து பண்ணாரி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே வழிபட ஏற்பாடுசெய்யப்பட்டு கோயில் கேட் பூட்டப்பட்டுள்ளது.
வெளியூர் பக்தர்கள் கோயில் வளாகத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்களின்றி கோயிலில் வழக்கம்போல நான்கால பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: தீவிரமடையும் தொற்று: கோபுர தரிசனம்... கோடி புண்ணியம்!