ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 121 கிமீ தூரம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது நெல் சாகுபடி பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து அதிகபட்சமாக 2,300 கனஅடி நீர் பாய்ந்து செல்வதால் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளை தொட்டபடி செல்கிறது.
தண்ணீர் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாய்க்காலில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை, காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வாய்க்கால் முன் காவல்துறை எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பவானிசாகர் மேட்டுபாளையம் சாலை, எரங்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு வாய்க்காலில் பொதுமக்கள் உள்ளூர் மக்கள் துணி துவைப்பதற்கு பாதுகாப்பான படிக்கட்டுகள் கட்டப்பட்டு அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தண்ணீரின் வேகத்தை அறியாமல் படிக்கட்டுகளை தாண்டி வாய்காலில் ஆழமாக பகுதிக்கு சென்று குளிக்கினறனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறார்களை சிலர் காப்பாற்றி கரை சேர்க்கின்றனர். குறும்புக்கார சிறுவர்கள் வாய்க்கால் கரையோரம் உள்ள மரங்களில் ஏறி கிளையை பிடித்து தொங்கி விளையாடுகின்றனர். உயரமான மரத்தில் இருந்து வாய்க்காலில் குதித்து நீந்தி செல்கின்றனர்.
இவ்வாறு குளிக்கும் பெரும்பாலான சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
நீரின் வேகம், கால்வாய் ஆழம் தெரியாமல் குளிக்கும் பொதுமக்களை எச்சரித்து ஆபத்து நிகழும் முன் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு கரோனா சான்றிதழ் எல்லாம் செல்லாது - ஸ்பைஸ் ஜெட் அடாவடி