ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறாகப் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், வனப்பகுதியின் வழியாக ஓடி, பின் பாலாற்றில் கலந்து, மேட்டூர் அணைக்குச் செல்கிறது.
இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையத்தில் பாலாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையின் பக்கவாட்டில் நேற்று (ஆக.30) கரை அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதனால், தடுப்பணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணானது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தடுப்பணையின் பக்கவாட்டு கரை அரிப்பு ஏற்பட்டதால் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அணையின் தடுப்புச்சுவர்கள் சேதமடையாமல் உள்ளநிலையில், மீண்டும் கரையைப் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பழனி சண்முகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை