ETV Bharat / city

ஓணம் கொண்டாட்டம்: சத்தியமங்கலத்தில் கிலோ ரூ.4000 வரை எட்டிய பூக்களின் விலை!

ஓணம் பண்டிகையையொட்டி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4,000 ரூபாய் வரை விற்பனையாவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 6, 2022, 4:01 PM IST

ஈரோடு: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுவதால் பூ வியாபாரிகள், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன்நகர், புதுவடவள்ளி, தாண்டம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மல்லிகைப்பூக்களுக்கு, சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்பின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், ஆவணி மாதம் முகூர்த்த சீசன் என்பதால் மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனிடையே, தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் தேவை அங்கு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், மல்லிகைப்பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

இதனிடையே, ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த சீசன்களால் இன்று (செப்.6) சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூக்களை வியாபாரிகள் போட்டி ஏலம் எடுத்தனர். இதனால், மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4000 வரை விற்பனையானது. இதனால், மல்லிகைப்பூக்களை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: Watch Video: கேரளத்தில் களைகட்டிய ஓணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.