ஈரோடு: திருமணமாகி மூன்று மாதங்களே ஆன பெண் மென்பொருள் பொறியாளர், ஆன்லைனில் விஷ வாயுவை வாங்கி தலையில் பிளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு தற்கொலை செய்த சோக சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் நல்லகவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவரும் மென்பொருள் பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வந்தனர்.
இதற்கிடையே பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்த ஊருக்கு செப்.18இல் சென்ற இந்து, அவரது தாயார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆன்லைனில் ஹீலியம் எனப்படும் விஷவாயுவை வாங்கி தலையில் பிளாஸ்டிக் கவரினை போட்டுக்கொண்டு, அதனுள் வாயுவை செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆனதால் இந்த கொடூர தற்கொலை குறித்து கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை பெற்று தரப்படும்: அமைச்சர் உறுதி