ஈரோடு: திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா நேற்று (ஆகஸ்ட் 24) பவானிசாகரில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அத்துடன் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண பொருள்களை வழங்கினார். இதையடுத்து, புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தலைசிறந்த ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணத் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. 100 நாள்கள் ஆட்சிப் பொறுப்பை எந்த எதிர்க்கட்சிகளும் குறை கூற முடியாது.
இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிகையில் வெளிடப்பட்டுள்ள செய்தியில், நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்யும் முதலமைச்சர்களில் மு.க. ஸ்டலின் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார்.
அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டம் கொண்டுவந்தார். இதனை தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்தாண்டு பட்ஜெட் ஒரு குறை பட்ஜெட். இதற்கு முந்தைய பட்ஜெட் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தாக்கல்செய்யப்பட்டது.
அதனால் நிதிநிலைமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய பட்ஜெட்டில் புதிய திட்டங்களைக் கொண்டுவருதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 'வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ' - ஆ. ராசா உருக்கம்