ETV Bharat / city

நண்பனுக்கு பரிசு வாங்க கிரசர் உதிரி பாகங்கள் திருடிய இளைஞர்கள் கைது! - சென்னை குற்றச் செய்திகள்

தங்களது நண்பனுக்கு பிறந்த நாள் பரிசு வாங்க கையில் பணம் இல்லாததால், கிரசரின் உதிரி பாகத்தைத் திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உதிரி பாகங்கள் திருடிய இளைஞர்கள் கைது
உதிரி பாகங்கள் திருடிய இளைஞர்கள் கைது
author img

By

Published : Jun 26, 2021, 5:09 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த காமராஜபுரம் பகுதியில் இயக்கி வருகின்றது பி.எஸ். ப்ளூ மெட்டல் கிரசர். கடந்த 22ஆம் தேதி, அங்கு கண்காணிப்பாளராக பணிபுரியும் தண்டபாணி மதிய உணவிற்காக வெளியே சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து மீண்டும் கிரசரை இயக்கியபோது, இயந்திரத்தில் இருந்து 30 கிலோ எடையுள்ள இரும்பு உதிரி பாகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து தண்டபாணி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மூன்று நபர்கள் கிரசரின் உதரி பாகங்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சரண் (19) துர்கா நகர் சேர்ந்த ஆகாஷ் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என ஆகியோர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து, அம்மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நண்பனின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்க கையில் பணம் இல்லாததால் கிரசர் உதிரி பாகத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து திருடிய பொருளை பம்மல் பகுதியில் உள்ள இரும்பு கடையில் ரூ.1,300க்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.

அந்த கடைக்கு சென்று உதிரி பாகத்தை பறிமுதல் செய்து காவல் துறையினர், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, இளைஞர்கள் இருவரை சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: காவலர்களுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள் கைது: வைரலான காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.