ETV Bharat / city

பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும் - இளம் தொழில் முனைவோர் இஷானா - இஷானா

பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும், அதன்மூலம் தைரியமும் தொழில் முனைவோருக்கான தகுதியும் வந்துவிடும். பெண்கள் நிறைய படிக்க வேண்டும், அப்போதுதான் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் இஷானா.

பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்
பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்
author img

By

Published : Mar 7, 2021, 7:55 PM IST

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் மிகப்பெரிய பிரச்னை மாதவிடாய். சாதாரண நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதால் அவர்கள் கூடுதலாக சில பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சாதாரண நாப்கின்களால் ஒரு சிலருக்கு அரிப்பு, எரிச்சல், நீர்க்கட்டி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதைப் பயன்படுத்தினால் பிரச்னை என்று தெரிந்தும் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் பெண்கள் இருக்கின்றனர். அனைத்து பெண்களைப் போலவும் இந்தப் பிரச்னையை சந்தித்த இளம்பெண் இதற்கான மாற்றுவழியை கண்டறிந்துள்ளார்.

கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் இஷானா (19). இவர் நெகிழியாலான சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக மறுமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் காட்டன் துணிகளால் நாப்கின்களைத் தயாரித்துவருகிறார். ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த இவர், முதலில் தனக்காக நாப்கின்களைத் தயாரித்துள்ளார். இஷானாவின் இந்தச் சிறிய முயற்சிதான் அவரை தொழில் முனைவரோக மாற்றி, பல்வேறு சாதனை விருதுகளை பெற காரணமாக அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் தான் மட்டும் உருவாக்கி வந்த இந்த காட்டன் நாப்கினை, தற்போது தன்னுடன் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப பெண்களை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

இவரது இந்த முயற்சி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தனக்கு போதாது இன்னும் நிறைய பேருக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மகளிர் தினத்தை ஒட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கரோனா சமயத்தில் சிறிது தொழில் பாதிப்பு ஏற்பட்டாலும் தற்போது நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. பெண்கள் தொழில் முனைவோராக வருவதற்கு துணிந்து முன் வரவேண்டும், தொழில் முனைவோராவதற்கு முன்பு சந்தைப்படுத்துதலை பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

சந்தைப்படுத்துதலில் பெண்கள் மிக குறைவாக உள்ளனர். சந்தைப்படுத்துதல் செய்தால் மட்டுமே மற்றவர்களுடன் பழக முடியும், அதற்கு தங்களுடைய பொருட்கள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள நிறைய பேரிடம் பேசவேண்டியுள்ளது. சந்தைப்படுத்துதல் உருவாக்குதல் இரண்டிற்குமே பெரிய வித்தியாசம் கிடையாது. பெண்கள் தற்போது சுய தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். சிறு சிறு தொழிலாக ஆரம்பித்தால் நாளடைவில் நன்கு வளர்ச்சியடையச் செய்ய முடியும். பெண்களுக்கு அரசியல் தெரிய வேண்டும், அதன்மூலம் தைரியமும் தொழில் முனைவோருக்கான தகுதியும் வந்துவிடும். பெண்கள் நிறைய படிக்க வேண்டும், அப்போதுதான் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். நான்கு சுவற்றுக்குள் தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து வெளியே வந்தால் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.