கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை எஸ்.என்.ஆர் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், மைதானத்தை திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில் பல போட்டிகள் நடத்தப்படும் எனவும், அடுத்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் எனவும் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன், அடுத்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தோனி விளையாடுவார் என்றார்.