கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட். இங்கு கள மேலாளராக பணியாற்றுபவர் குணசேகரன்.
இவர் தனது குடும்பத்தினருடன் தேயிலைத் தோட்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நள்ளிரவு 1:30 மணி அளவில் 15 காட்டு யானைகள் இவருடைய வீட்டை முற்றுகையிட்டன.
இவர் உடனடியாக தோட்ட காவலாளிகளுக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்கள் வருவதற்குள் காட்டு யானைகள் அவருடைய வீட்டின் பின்பக்கம் முன் பக்கம் உள்ள ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின.
மேலும், வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின், கேஸ் ஸ்டவ் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தின.
இதனிடையே விரைந்து வந்த தேயிலை தோட்ட காவலாளிகள், தொழிலாளர்கள் இணைந்து காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலைத் தோட்ட காவலர்களும் வனத்துறையினரும் இணைந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.