ETV Bharat / city

பில்லூர் அணை திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - கோயம்புத்தூர்

தொடர் மழையால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பில்லூர் அணை திறப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Jul 14, 2022, 11:47 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது.

பில்லூர் அணை திறப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பில்லூர் அணை திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 97.5 அடியைக் கடந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து, அதன் நீர் வரத்தான விநாடிக்கு 12,000 கனஅடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானியாற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகைப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.