ETV Bharat / city

'தைரியம் இருந்தால்...!' - மோடி, அமித் ஷாவுக்கு சவால்விடுத்த உதயநிதி - Udayanidhi Stalin criticizes Modi

'மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்குத் தைரியம் இருந்தால் மக்களை வேண்டாம், பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா?' என்று பரப்புரையின்போது வினா தொடுத்த உதயநிதி, 'என்னுடைய சொத்து முழுவதும் அமித் ஷாவின் மகனுக்கு எழுதிவைக்கத் தயார். அவருடைய மகன் சொத்தை எனக்கு எழுதிவைக்கத் தயாரா, அதற்கு அவரிடம் தைரியம் உள்ளதா?' என்று சவாலும்விடுத்துள்ளார்.

மோடி, அமித் ஷாவிற்கு உதயநிதி சராமரி கேள்விகளுடன் சவால்

author img

By

Published : Apr 2, 2021, 8:59 AM IST

கோவை: சூலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் பிரிமியர் செல்வத்தை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "மோடியையும் முதலமைச்சர் பழனிசாமியையும் செல்லாக்காசாகக் கசக்கி எறிவீர்களா? மோடி மதுரையில் நட்டுச்சென்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை எடுத்துவந்துள்ளேன். அதன் செலவு 75 கோடி ரூபாய். பாஜக, அதிமுக கூட்டணியை வீட்டிற்கு அனுப்புவதற்கான நேரம் வந்துவிட்டது.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை. அதற்குப்பின் வந்த முதலமைச்சர் பழனிசாமி நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்தார். நீட் தேர்வால் 14 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கருமத்தம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
என்னை குறுக்கு வழியில் வந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். நான் குறுக்கு வழியில் வரவில்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து உயர்ந்துவந்துள்ளேன். மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்குத் தைரியம் இருந்தால் மக்களை வேண்டாம், பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா?
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகப் பேச முடியவில்லை. ஏழு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் பாஜக செய்யவில்லை. கிரிக்கெட் விளையாடத் தெரியாத அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா 32 வயதில் கிரிக்கெட் வாரியத்துக்குத் தலைவரானது எப்படி, இவ்வளவு சொத்து வந்தது எப்படி?
கங்குலியை பாஜகவில் சேரச் சொல்லி மிரட்டியதால்தான் அவருக்கு நெஞ்சுவலி வந்தது. நன்றாக உள்ள மாநிலங்களைச் சிதைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒவ்வொரு மாநிலமாகக் குறுக்கு வழியில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைக்க அமித் ஷாதான் முக்கியக் காரணம்.
என்னுடைய சொத்து முழுவதும் அவரது மகனுக்கு எழுதிவைக்கத் தயார். அவருடைய மகன் சொத்தை எனக்கு எழுதிவைக்கத் தயாரா, அதற்கு அவரிடம் தைரியம் உள்ளதா?
அமித் ஷா மோடியைப் பார்த்து பயப்படவும் கும்பிடுபோடவும் நான் எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ கிடையாது. நான் உதயநிதி ஸ்டாலின்; கருணாநிதி பேரன் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏற்கனவே தமிழ்நாட்டை அடகு வைத்துவிட்டார்கள்.
இனியும் அதற்கு வாய்ப்புத்தரக் கூடாது. எடப்பாடியில் திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி. அதிமுக ஆட்சியில் ஊழல்செய்த முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சிறைக்குச் செல்வது உறுதி" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.