கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தடைசெய்யப்பட்ட அலெக்சாண்டரின் பாரகிட் எனப்படும் மலைவாழ் கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆரோக்கியாராஜ் சேவியர் உத்திரவின் பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அனீஸ் மோகன், சதீஷ்குமார் ஆகிய இருவர் வனத்துறையால் தடைசெய்யப்பட்ட 9 கிளிகளை விற்பனைக்கு வைத்திருந்தனர், அவர்களை உடனடியாக பொள்ளாச்சி வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து கிளிகளையும் பறிமுதல் செய்தபின் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற அரசால் தடை செய்யப்பட்டுள்ள வனவிலங்குகள், பறவைகள் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் இது போன்று யாராவது விற்பனை செய்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பாம்பிடம் சிக்கிய கிளியை காப்பாற்றிய புத்திசாலி சிறுவன்!