அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், காவலர் ஒருவரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. அதைத் தொடர்ந்து, இனவெறிக்கு எதிராக அமெரிக்க மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில், இனப்பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் நினைவேந்தல் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அமெரிக்காவில் நிகழும் இனவெறி பாகுபாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்டத் தலைவர் நேருதாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டம் - அடிமைகளை விற்றவரின் சிலை அகற்றம்