ETV Bharat / city

கழிவறை கட்டுவதில் ஊழல்... திறந்தவெளியில் ஆபத்து! - வேதனையில் தவிக்கும் சோமையம்பாளையம் மக்கள் - கழிப்பறை சீர் செய்ய மக்கள் கோரிக்கை

கோவை: சோமையம்பாளையம் பகுதியில் கழிப்பறை கட்டுவதில் ஊழல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் வன விலங்குகளினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என்று அவ்வூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

toilet issue
author img

By

Published : Sep 24, 2019, 11:21 AM IST

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. அந்த ஊராட்சிக்குள்பட்ட காந்திநகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.

அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.

22 பயனாளிகளுக்கு கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிப்பிட கட்டுமான பணிகளும் நடைபெற்றன. அதில் பெரும்பாலான வீடுகளுக்கு கழிப்பறை கட்டடம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கொண்டு கழிவுநீருக்கான நிலத்தடி கழிவுநீர் தொட்டி கட்டப்படவில்லை. கழிப்பிட பணிகள் முழுமைபெறாத நிலையிலேயே அவை பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மூன்று ஆண்டுகள் கடந்தும் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படாததால் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

கழிப்பறை கட்டடமும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் 12 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகப் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் காந்திநகர் மக்கள் தெரிவித்தனர். காட்சிப் பொருளாக உள்ள கழிப்பறைகள் விறகு, பழைய இரும்புப் பொருட்கள் வைப்பு அறையாக மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

தனிநபர் கழிப்பிடங்கள் பயனற்று கிடக்கும் நிலையில், பொதுக்கழிப்பிடமும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைத் தேடிச் செல்லும் அவலநிலை இருப்பதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மேலும் இரவு, அதிகாலை நேரத்தில் திறந்தவெளி கழிப்பிடம் செல்லும்போது யானைகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் பெண்கள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

கழிவறை கட்டியும் பயனில்லை

தாங்களாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கழிப்பறை கட்டியவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை எனவும், அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கு குழி தோண்டப்பட்டு மூடப்படாததால் குழந்தைகள் தவறிவிழ வாய்ப்பு உள்ளதாகவும் சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் அங்கு பள்ளங்கள் உருவாகி குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தங்களுக்கு பயன்படுத்த ஏற்ற வகையில் கழிப்பறைகளை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென்பதே காந்தி நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கழிப்பறை வசதியில்லாமல் அரசு கட்டித் தந்த வீடுகள் - தவிக்கும் மக்கள்

Intro:கோவை சோமையம்பாளையம் பகுதியில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்,திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் வன விலங்குகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. Body:

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பிடங்கள் கட்டும் திட்டம் துவக்கப்பட்டது. 22 பயனாளிகளுக்கு கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிப்பிட கட்டுமான பணிகளும் நடைபெற்றன. அதில் பெரும்பாலான வீடுகளுக்கு கழிப்பறை கட்டிடம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. மேற்கொண்டு கழிவு நீருக்கான நிலத்தடி கழிவுநீர் தொட்டி கட்டப்படவில்லை. கழிப்பிட பணிகள் முழுமை பெறாத நிலையிலேயே, அவை பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. 3 ஆண்டுகள் கடந்தும் கழிவு நீர் தொட்டி அமைக்கப்படாததால், கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

கழிப்பறை கட்டிடமும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு கழிப்பறைக்கும் 12 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் காந்திநகர் மக்கள் தெரிவித்தனர். காட்சி பொருளாக உள்ள கழிப்பறைகள் விறகு மற்றும் பழைய இரும்புப்பொருட்கள் வைப்பு அறையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தனிநபர் கழிப்பிடங்கள் பயனற்று கிடக்கும் நிலையில், பொதுக்கழிப்பிடமும் பராமரிப்பு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் மக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களை தேடிச் செல்லும் அவல நிலை இருப்பதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் திறந்த வெளி கழிப்பிடம் செல்லும்போது யானைகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் பெண்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

தாங்களாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கழிப்பறை கட்டியவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை எனவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.மேலும் அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கு குழி தோண்டப்பட்டு மூடப்படாத்தால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளதாகவும்,சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் அங்கு பள்ளங்கள் உருவாகி குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தங்களுக்கு பயன்படுத்த ஏற்ற வகையில் கழிப்பறைகளை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென்பதே காந்தி நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.