ETV Bharat / city

'கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை யாரேனும் தாமாகத் திறந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி - கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை யாரேனும் தாமாகத் திறந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்

கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை யாரேனும் தாமாகத் திறந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
author img

By

Published : Jun 10, 2022, 11:04 PM IST

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

முன்னதாக மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை (ஜூன் 12) முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "இத்திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதலமைச்சர், 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளார். வரக்கூடிய காலத்தில் மிதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் 45 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய கடைகள் இல்லை. இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம்.

சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும்" என்றார்.

கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, அவர் "நாளை சந்திப்போம்" எனப் பதிலளித்தார். மேலும் சிலர் தாங்களாகவே கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை திறந்து கொள்வோம் எனக் கூறி வருவதற்கு, அவ்வாறு திறந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் கூறினார்.

வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், சுற்றுலாத் துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு கட்டணம் குறைவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிலர் ரேஷன் கடைகளில் புகைப்படங்களை வைத்துக் கொள்கின்றனர். இது ஒரு தவறான நடவடிக்கை. வரக்கூடிய காலங்களில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வழங்க உள்ளார். அதேசமயம் இன்றைய தினம் மேலும் 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர், துணை மேயர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை நிறுத்த இடமில்லை எனக்கூறிய ஊழியருக்கு அடி: காவலரின் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.