ETV Bharat / city

விண்வெளி கருவிகள் வடிவமைப்பு விழா... அமைச்சர்கள் பங்கேற்பு! - tamilnadu ministers attending

கோவை: தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்ட தொடக்க விழாவில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எஸ் பி வேலுமணி - சம்பத்
author img

By

Published : Aug 16, 2019, 11:49 PM IST

கோவை மாவட்டம் அரசூரில் தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்டத்த்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் சம்பத், போயிங் விமான நிறுவனமும், எல்.எம்.டபிள்யூ நிறுவனமும் இணைந்து இந்த பயிற்சி மையத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் வெளிவருகின்றனர். இங்கு மனிதவளம் அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கடந்து, அடுத்ததாக உலகம் மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விண்வெளி கருவிகள் வடிவமைப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள்

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்குப் பின்னர் நம் மாநிலதிற்கு, அதிக அளவு முதலீடு வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர், சென்னை - கன்னியாகுமரி தொழில் மேம்பாட்டுத் தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கி தொழில் மேம்பாட்டுத் தடம் உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாகத் தொழில் மேம்பாட்டுத் தடம் விரைவில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Intro:கோவையில் தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்ட துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்Body:கோவை மாவட்டம் அரசூரில் தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி பயிற்சி நிறுவன திட்ட துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். இநத விழாவில் பேசிய
தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், போயிங் விமான நிறுவனமும், எல்.எம். டபிள்யூ நிறுவனமும் இணைந்து இந்த பயிற்சி மையத்தை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.தமிழகத்தில் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் , பாலிடெக்னிக்கில் இருந்து ஆண்டு தோறும் 5 லட்சத்துக்கும மேற்பட்டவர்கள் வெளியேறுகின்றனர் எனவும்,
தமிழகத்தில் மனிதவளம் அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
பெட்ரோல்,டீசல் கார்களை கடந்து, அடுத்தாக உலகம் எலக்ட்ரிக் காரினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது எனவும்
அதன் பின்பு ஏரோ ஸ்பேஸ் உலகம்தான் இருக்கபோகின்றது எனவும் தெரிவித்தார்.கோவை மாவட்டம்
சூலூரில் 300 ஏக்கரில் இராணுவ தொழில் கூட மையம், திருப்பூரில் சிப்காட் தொழில் பேட்டை மையமும் உருவாக்க அரசிடம் திட்டம் உள்ளது எனவும் பெருந்துறையிலும் இடம் பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ.பி.வேலுமணி,
தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின்னர் தமிழகத்திற்கு அதிக அளவு முதலீடு வரத்துவங்கியுள்ளது எனவும் தமிழகத்தில் சென்னை - பெங்களுர், சென்னை - கன்னியாகுமரி தொழில் மேம்பாட்டு தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கி தொழில் மேம்பாட்டு தடம் உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும்
மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக தொழில் மேம்பாட்டு தடம் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் துவங்கப்பட்டு செயல்படும் போது தொழில் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து அமைச்சர்கள் சம்பத் , வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.அப்போது
ஏரோ ஸ்பேஸ் பாலிஸி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே
ஏரோ ஸ்பேஸ் துறையில் 30 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது இது போன்ற பயிற்சி மையங்கள் உருவாகும் போது, கோவை மாவட்டம் ஏரோ ஸ்பேஸ் மையமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார். தற்போது ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் எனவும் தெரிவித்த அவர்,இதை மத்திய அரசுதான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.ஆட்டோமொபைல் துறையில் விற்பனை குறைத்துள்ளது என கூறிய அவர், டெக்னாலஜி மாற்றினால் போதும் விற்பனை சரியாகிவிடும் எனவும் , ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் வேலை இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் ஒரு பின்னடைவு இருக்கின்றது இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் எனவும் தெரிவித்தார். கோவை டைடல் பார்க்கில் 5லட்சம் சதுர அடியில் விரிவாக்க பணிகள் 200 கோடியில் நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம்
5000 ஐ.டி ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்கட்டமாக 75 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.2000 கோடி மதிப்பில் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டி இருக்கின்றது எனவும் கொஞ்சம் கொஞ்சமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின்னர் நிறைய தொழில்கள் வரும் எனவும் ,கார்கோ விமானங்கள் நிறைய வரும் எனவும் ,திருப்பூர் தொழில்களும் மேம்பாடு அடையும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.