ETV Bharat / city

காரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்

author img

By

Published : May 5, 2020, 1:51 PM IST

கோவை: கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6 காவலர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

காரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனாவால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டிருந்த நிலையில் பணியில் இருந்த காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கோவையில் கடந்த 15 நாள்களுக்கும் முன் கரோனா தடுப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 6 பேர் இன்று காலை குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையர் சுஜித் குமார் ஆகியோர் மலர் செண்டு, பழங்களை அளித்து கைதட்டி வழியனுப்பி வைத்தனர். இன்று மாலை ஒருவர் வீடு திரும்ப உள்ளார்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கோவையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 146 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 134 பேர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 7 காவலர்கள் வீடு திரும்ப உள்ளனர். மீதி நான்கு பேர் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் 15 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால் சென்னையிலிருந்து வரும் நபர்களையும் கேரளாவில் இருந்து வரும் நபர்களையும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்திய பிறகே அனுமத்திக்கப்படுகின்றனர்.

கோவையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் மக்கள் எவ்வாறு அதை பின்பற்ற வேண்டும் என்ற தகவல்கள் குறித்தும் விரிவான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும். மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியில் வரும்பொழுது முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அவ்வாறு இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

கரோனா பாதிப்பாளர்களுக்கு மருந்தான காவலரின் விசில் இசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.