கோவை மாவட்டம், உக்கடம் நாஸ் தியேட்டர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கரோனாவை பரப்புகின்ற மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மதுபானக் கடைகளை கொண்டு வருமானத்தை ஈட்டி வரும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களை பாதுகாக்க சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை: காதலனை தேடும் காவல்துறை