ETV Bharat / city

கேரளா ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு! - கோவை அண்மைச் செய்திகள்

கோவையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட கேரளா ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு
கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு
author img

By

Published : Dec 26, 2020, 3:23 PM IST

கோயம்புத்தூர்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் தொழில் நிமித்தமாக கோவைக்கு வந்தார். வேலை முடிந்து கேரளா திரும்பி சென்று கொண்டிருந்தார். நவக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் அப்துல் சலாமின் காரும், அவர் வைத்திருந்த 27 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது.

காவல்துறையில் புகார்

இதுதொடர்பாக க.க.சாவடி காவல்நிலையத்தில் அப்துல் சலாம் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கார் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், இன்று (டிச.26) கோவை சிறுவாணி சாலை, மாதம்பட்டி அருகே கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், அது கார் அப்துல் சலாமிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார் என்பதை உறுதி செய்தனர்.

கைரேகை பதிவு

இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காரில் உள்ள கை ரேகைகளை சேகரித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் காரை யார் அங்கு கொண்டு வந்து நிறுத்தியது என்பதை அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன் கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியும் உள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் அதிகாலையில் காரை வழிமறித்து கொள்ளையடித்த கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.