கோவை மாவட்டம் கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் வசித்துவரும் பிரதீப்-வனிதா தம்பதியின் ஏழு வயது மகள் இன்று மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வேண்டும் என குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.