ETV Bharat / city

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களில் அமைச்சரின் படம்; வழக்கு தொடர திமுக ஆலோசனை! - ஆளுங்கட்சியினர் படத்துடன் பொங்கல் பரிசு கூப்பன்

பொள்ளாச்சியில், அமைச்சர் வேலுமணியின் படம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை பறிமுதல் செய்த திமுக மாவட்ட பொறுப்பாளர், வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களில் அமைச்சரின் படம்

author img

By

Published : Dec 30, 2020, 8:13 PM IST

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் 22, 23ஆவது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில், அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த டோக்கன்களை குடிமைப் பொருள் அலுவலர்கள் வழங்காமல், 22ஆவது வார்டுக்குட்பட்ட ரேஷன் கடை ஊழியர் சரவணன், அவரது மனைவி மூலமாக வழங்கினார். அவர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டோக்கன்களை வழங்கி வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு சென்ற கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், யார் வழங்க சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பி கூப்பன்களை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் புகார் அளித்த செல்வராஜ், இதுகுறித்து வழக்கு தொடர்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதையும் படிங்க : அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.