கோவை: பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை தேங்காய்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.105.90-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி குறைந்த பட்ச ஆதார விலையினை வழங்கவும்; அவற்றை வெளி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஆக.29) மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், "கொப்பரை கொள்முதல் செய்ய ஒரு மாத காலம் தான் அவகாசம் உள்ளது. இந்நிலையில், வெளிமார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயரும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும். எனவே, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் மட்டுமே கொள்முதலை செய்யாமல், கடந்த காலங்களைப்போல் அனைத்து முக்கியமான கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகையினை வாரம் ஒரு முறை காசோலை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தனியாக USER ID வழங்க வேண்டும். கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு ரூ.105.90-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொப்பரை தேங்காய்களுக்குரிய உரிய விலை வேண்டும் - தேங்காய் உடைத்து நூதன போரட்டம்!