ETV Bharat / city

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்திப் பிடித்த காவல் துறையினர் - கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம்

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பியோடியவர்களை பொள்ளாச்சி காவல் துறையினர் துரத்திப் பிடித்துள்ளனர்.

வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பியோடியவர்களை பொள்ளாச்சி காவல் துறையினர் துரத்திப் பிடித்துள்ளனர்
வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்திப் பிடித்த காவல் துறையினர்
author img

By

Published : Nov 18, 2021, 10:35 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி-பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பியோடியவர்களை காவல் துறையினர் துரத்திப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். நேற்று (நவம்பர் 16) இவரிடம் சிலர் மிரட்டி மூன்று பவுன் தங்க செயின், மாருதி காரை வழிப்பறி செய்து தப்பியுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு வழிப்பறியில் ஈடுபட்ட சிலர் தப்பிச் செல்வதாகத் தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களைத் துரத்திப் பிடித்த காவல் துறையினர்

தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்டபோது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றது. இந்நிலையில் தப்பிச் சென்ற காரை காவல் துறையினர் துரத்திச் சென்று சின்ன பாளையம் பகுதியில் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ராபின், அருள் ராஜ், சேவாக், மாரியப்பன் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நான்கு பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் வழிப்பறி - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.