ETV Bharat / city

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் - கோவை ஆட்சியர் - கோயம்புத்தூரில் கரோனா

பொது இடங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவரக்ளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் ஆட்சியர், coimbatore collector sameeran
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சமீரான்
author img

By

Published : Jan 7, 2022, 12:06 PM IST

Updated : Jan 7, 2022, 2:38 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்று காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வரும் ஞாயிறு (ஜனவரி 9) முதல் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரான் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,"பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் தற்போது உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மேலும் 250 படுக்கைகள் அதிகப்படுத்த உள்ளது.

தயார் நிலையில் 4,500 படுக்கைகள்

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டடத்தில், 'கோவிட் கேர் சென்டர்' தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 'கோவிட் கேர் சென்டர்' 4 ஆயிரத்து 300 படுக்கை வசதிகளும், கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதிகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 350 படுக்கைகளும், கொடிசியாவில் 700 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.

கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கல்லூரிகளில் 'கோவிட் கேர் சென்டர்' செயல்பட உள்ளது. மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக ஆக்ஸிஜன் 99 கிலோ லிட்டர் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திரவியம் முப்பத்தி ஒன்று உள்ளது.

கோயம்புத்தூர் ஆட்சியர், coimbatore collector sameeran
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சமீரான்

அதிகரிக்கும் கரோனா

கோவையில் தற்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70இல் இருந்து 300 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது, இரண்டு முகக்கவசங்கள் அணிந்து செல்வது அவசியம். கோவையில் 96 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும் 78 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் நாள்களில் அபராதம் விதிக்கப்படும். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான பரிசோதனைக்கு பிறகு அனுமதி அளிக்கப்படும்" என தெரிவித்தார். இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், நகராட்சி ஆணையாளர் தானு மூர்த்தி, தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய தூங்கா நகரம் மதுரை

Last Updated : Jan 7, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.